சென்னை, ஏப்.24- பேங்க் ஆஃப் பரோடா, 9,000-க்கும் மேற்பட்ட கிளைகளையும், 18,000-க்கும் மேற்பட்ட வங்கி பொறுப்பாளர்களையும்கொண்டுள்ளது. இவர்கள் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறார்கள்.
பொதுத்துறை வங்கிகளிடையே முதல் முறை யாக பி.சி. முகவர்களுக்குசுத்திகரிப்பான்கள், கிருமிநாசினிகள், முகமூடிகள், கையுறைகள் போன்றவற்றை வாங்குவதற்காகவும் அவர்களின் பணி இடங்களில் சுகாதாரத்தை பராமரிப்பதற்கும் 2,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஒவ்வொரு பி.சி. முகவர்களுக்கும் போக்குவரத்து செலவுக்காக வேலை நாள் ஒன்றுக்கு கூடுதலாக 100 ரூபாய் வழங்கப்படு கிறது. ஜன்தன் திட்டத்தின் கீழ் அனைத்து பெண் களுக்கும், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் உதவித் திட்டத்தின் மூலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்க மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தப் பெண்க ளின் வங்கி கணக்கில் சேர்க்க இந்த வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் தொகை, அவர்க ளின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். மேலும், இந்தத் தகவல் அவர்க ளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது.